சீனாவில் கல்வி கற்கும் இலங்கை மாணவர்கள் 21 பேர் இலங்கைக்கு

சீனாவின் டியாஜின் நகரில் வசித்த 21 இலங்கையர்களும் இலங்கைக்கு வருவதற்காக அங்கிருந்து புறப்பட்டுள்ளனர்.

சிச்சுவான் மாகாணம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து 30 மாணவர்கள் இலங்கைக்கு வருவதற்கு தயார் நிலையில் உள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள உஹான் பிரதேசத்திற்கு பிரவேசிக்கும் அங்கிருந்து வெளியேறவும் விதிக்கப்பட்டுள்ள தடை இதுவரை தளர்தப்படவில்லை.

அதனால் அங்கு தங்கியுள்ள மாணவர்களை இலங்கைக்கு அழைத்துவர சீன அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மாணவர்களை அழைத்து வர ஜனாதிபதி செயலகம், வெளிவிவகார அமைச்சு, சுகாதார அமைச்சு, இலங்கைக்கான சீன தூதரகம் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் ஆகியன முழுவீச்சுடன் செயற்படுகின்றன.

கடனட்டை மூலம் இரண்டாம் நபர் விமான கட்டணங்களை செலுத்தவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை கையாள அரசாங்கம் தயாராக உள்ள நிலையில் இலங்கை வரும் மாணர்களுடன் தொடர்ந்தும் தொடர்பில் உள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

வைரஸ் தொற்றுக்கு இலக்கான ஒருவரிடம் 20 நாட்களுக்கு பின்னரே நோய் அறிகுறிகள் வெளிப்படும்.

அதுவரை வாய்களை மூடும் கவசங்களை பயன்படுத்துமாறு மாணவர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து வருகைதரும் பயணிகள் வெளியேற பிரத்தியேக நுழைவாயில் பயன்படுத்தப்படுவதாக சிவில் விமான சேவை அதிகாரி தெரிவித்துள்ளார்.

அதற்கமைய எவரேனும் குறித்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களை ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நோயாளர் காவு வண்டி உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Related posts