எங்களால் முடிந்ததை செய்துவிட்டோம், இனிமேல் நம் கையில் இல்லை: சீன அதிபர்

சீனாவை கடந்த சில நாட்களாக கொரோனா என்ற வைரஸ் நாடு முழுவதையும் அச்சுறுத்தி வரும் நிலையில் சீன அதிபர் இன்று அளித்த பேட்டியில் நாங்கள் எங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறோம். சில விஷயங்கள் நம்முடைய கையில் இல்லை, இந்த வைரஸ் பரவுவதை எங்களால் தடுக்க முடியவில்லை என்று கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுகொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் இதுவரை 52 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பலி எண்ணிக்கையை சீனா குறைத்து கூறுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது. அரசின் அறிவிப்பின்படி இந்த வைரஸ் இதுவரை 2000 பேர்களை தாக்கியுள்ளதாக தெரிகிறது.


மனிதர்களிடம் இருந்து இன்னொரு மனிதருக்கு பரவுவது மட்டுமின்றி விலங்குகளிடம் இருந்தும் மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவுவதால் இதனை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் அரசும் மருத்துவர்களும் திணறி வருகின்றனர்.கொரோனா
வைரஸ் எப்படி தோன்றியது என்று தெரிந்தால்தான் அதை கட்டுப்படுத்த முடியும் என்றும் ஆனால் அதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் சீன அதிபர் ஜி ஜிங்பிங் தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் காரணமாக மிகவும் அசாதாரணமான சூழ்நிலை உருவாகி உள்ளதாகவும், இதனை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியவில்லை என்றும் கூறிய அதிபர், இந்த கடுமையான சூழ்நிலையில் ராணுவத்தின் மருத்துவர்கள்தான் நோயாளிகளை கவனித்து வருகிறார்கள் என்றும், இருப்பினும் இந்த வைரஸ் பரவுவதை எங்களால் தடுக்க முடியவில்லை என்றும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.அமெரிக்காவுடன் வர்த்தக போர், ஹாங்காங் போராட்டம் என சீனா ஏற்கனவே ஒருசில சிக்கலில் உள்ள நிலையில் தற்போது கொரனோ வைரஸ் ஒரு தீர்க்க முடியாத பிரச்சனையாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Related posts