இந்தியாவுடன் அடுத்தடுத்த தோல்விக்கு என்ன காரணம்? மிகவும் வேதனையுடன் கூறிய வில்லியம்சன்

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இதில் இரு அணிகளுக்கிடையேயான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றது.

இரண்டாவது போட்டி தோல்வி குறித்து நியூசிலாந்து அணியின் தலைவர் கானே வில்லியம்சன் கூறுகையில், இது உண்மையில் எங்களுக்கு கடினமான நாள்.

முதல் போட்டியில் இருந்தே, இந்த மைதானம் முற்றிலும் மாறுபட்டு இருந்தது. எங்களது துடுப்பாட்டம் இன்னும் சற்று முன்னேற்றம் தேவை.

15 முதல் 20 ஓட்டங்கள் கூடுதலாக எடுத்து இருந்தால், சவால் நிறைந்த ஆட்டமாக மாறியிருக்கும். இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி எங்களை கட்டுப்படுத்தினார்கள்.

இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் எங்களை அழுத்தத்தில் தள்ளி அனைத்து விதத்திலும் தங்களது திறமையை நிரூபித்தனர். எங்களால் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட முடியும் என்று நினைத்தோம் ஆனால் இந்திய அணி வீரர்கள் அவர்களுடைய அனுபவத்தை இந்த போட்டியில் காண்பித்தனர்.

போட்டியை இறுதிவரை எடுத்துச்சென்று சிறப்பாக முடித்தனர். இந்த போட்டியில் 15 முதல் 20 ஓட்டங்கள் நாங்கள் நிச்சயம் குவித்து இருந்தே ஆக வேண்டும். அதுவே எங்களது தோல்விக்கு காரணமாக அமைந்தது.

அடுத்த போட்டியில் நிச்சயம் இதைவிட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். தோல்வியை மனதில் வைக்காமல் அடுத்த போட்டிக்காக கடந்து செல்ல இருக்கிறோம். ஒரு அணியாக இந்தியா போன்ற அணிகளுக்கு இடையே நாங்கள் இன்னும் முன்னேறிச் செல்ல வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார்.

Related posts