அனுஷ்கா படத்தின் தேதி மாற்றம்

அனுஷ்கா, மாதவன், அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள ‘நிசப்தம்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அனுஷ்கா படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்

அனுஷ்காஅனுஷ்கா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘நிசப்தம்’. இதில் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் ஹாலிவுட் நடிகர்களும் நடித்துள்ளனர். ஹேமந்த் மதுக்கூர் இயக்கியுள்ள இந்த படத்தில், அனுஷ்கா காது கேளாத, வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 4 இந்தியர்களுக்கும், அமெரிக்க போலீசுக்கும் இடையே நடக்கும் கிரைம் திரில்லர் படமாக தயாராகி உள்ளது. 

நிசப்தம் பட போஸ்டர்

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட 5 மொழிகளில் இப்படத்தை வெளியிட உள்ளனர். இப்படம் வருகிற ஜனவரி 31-ந் தேதி ரிலீசாகும் என படக்குழு தரப்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி நிசப்தம் படம் பிப்ரவரி 20-ந் தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts