அடுத்த மாதம் இந்தியா வரும் 5ஜி ஸ்மார்ட்போன்

விவோவின் ஐகூ பிராண்டு இந்தியாவில் தனது 5ஜி ஸ்மார்ட்போனினை அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.

அடுத்த மாதம் இந்தியா வரும் 5ஜி ஸ்மார்ட்போன்

விவோவின் ஐகூ பிராண்டு சீனாவில் கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. இந்த பிராண்டு அறிமுகமானது முதல் சீனாவில் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களை அங்கு வெளியிட்டுள்ளது. 
சீனாவை தொடர்ந்து ஐகூ பிராண்டு இந்திய சந்தையில் களமிறங்க திட்டமிட்டுள்ளது. அந்த வரிசையில் ஐகூ பிராண்டின் முதல் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருப்பதாக ஐகூ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதவிர உயர் ரக சிறப்பம்சங்கள் நிறைந்த 4ஜி ஸ்மார்ட்போன்களை இங்கு அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

விவோ ஐகூ ப்ரோ

இந்தியாவில் ஐகூ பிராண்டின் முதல் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் கொண்டிருக்கும் என்றும் இதில் 5ஜி வசதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சார்ஜிங், கேமிங் மற்றும் வடிவமைப்பு உள்ளிட்டவற்றில் சிறப்பான செயல்பாட்டை வழங்கும் என ஐகூ தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக ஐகூ பிராண்டு ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டு, எதிர்காலத்தில் ஆஃப்லைன் சந்தை மூலம் விற்பனையை நீட்டிக்க திட்டமிட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் பற்றிய இதர விவரங்கள் வரும் வாரங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் புதிய ஸ்மார்ட்போன் பல்வேறு அம்சங்களை பெறும் முதல் மாடல் என்ற பெருமையை பெறும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி இந்தியாவில் வெளியாகும் முதல் 5ஜி ஸ்மார்ட்போனினை ஐகூ பிராண்டு வெளியிடும் என்றே தெரிகிறது.

Related posts