மீண்டும் வீழ்ந்தது நியூசிலாந்து

சுற்றுலா இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் ஐந்து போட்டிகளை கொண்ட ரி-20 தொடரின் இரண்டாவது போட்டி இன்று (26) இடம்பெற்றது.

இப்போட்டியில் 133 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 7 விக்கெட்களினால் அபாரமாக வெற்றி பெற்றது.

அணி சார்பில் லோகேஸ் ராகுல் (57), சிரேஸ ஐயர் (44) ஓட்டங்களை பெற்றனர்.

நியூசிலாந்தின் பந்து வீச்சில் டிம் சௌத்தி இரு விக்கெட்களை கைப்பற்றினார்.

நியூசிலாந்தின் துடுப்பாட்டம் –

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 132 ஓட்டங்களை பெற்றது.

அணி சார்பில் மார்டின் குப்தில் (33), ரிஎல்.செய்பெர்ட் (33) ஓட்டங்களை பெற்றனர்.

இந்தியாவின் பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா இரு விக்கெட்களை கைப்பற்றியிருந்தார்.

Related posts