மாஸ்டர் மூன்றாவது லுக்.. ரத்தம் சொட்ட சொட்ட விஜய் – விஜய் சேதுபதி

விஜய் நடிப்பில் உருவாகும் மாஸ்டர் படத்தின் மூன்றாவது லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது

விஜய் நடிப்பில் உருவாகும் மாஸ்டர் படத்தின் மூன்றாவது லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய் பிகில் படத்தை தொடர்ந்து கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் என பெயரிடப்பட்ட இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடிக்கின்றார். இவர்களுடன் நடிகர் சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், கவுரி கிஷன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று மூன்றாவது லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. சொன்னப்படி மாலை 5 மணிக்கு இந்த மூன்றாவது லுக் போஸ்டரை வெளியிட்டது தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பி கிரியேட்டர்ஸ். இந்த போஸ்டரில் மாஸ்டர் படத்தின் ஹீரோ விஜய் மற்றும் வில்லன் விஜய் சேதுபதி இடம்பெற்றுள்ளனர்.

Related posts