பூஜித் ஜயசுந்தர ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் தெரிவித்த விடயம்

மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை மத தலைவர் ஊடாக கையளிப்பதாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தமக்கு தெரிவித்ததாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்றைய தினம் வாக்குமூலம் வழங்கிய போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர வாக்குமூலம் வழங்குவதற்காக ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று முற்பகல் 10 மணியளவில் முன்னிலையாகியிருந்தார்.

புத்தர் சிலை உடைக்கப்பட்டதன் பின்னர் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியினால் அழைப்பு மேற்கொள்ளப்பட்டதா என இதன்போது பூஜித் ஜயரத்னவிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தமக்கு அழைப்பை மேற்கொண்டதாக ஏற்றுக் கொண்ட பூஜித் ஜய சுந்தர, மாவனெல்லை புத்தர் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தாம் அறிந்துள்ளதாக அவர் தனக்கு குறிப்பிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அவர்களை கைது செய்வதற்கு உதவி புரிவதாகவும், சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் தொடர்பில் காவல்துறையினருக்கு அசாத் சாலி தகவல் வழங்கியதாகவும் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த சந்தேகநபர்கள் மத தலைவர் ஊடாக கையளிப்பதாக அசாத் சாலி குறிப்பிட்டதாகவும் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் குறிப்பிட்டுள்ளார்.

Related posts