பிரபல டிவி சீரியல் நடிகை தற்கொலை: மன அழுத்தம் காரணமா?

மும்பையை சேர்ந்த பிரபல டிவி சீரியல் நடிகை திடீரென தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மும்பையைச் சேர்ந்த டிவி சீரியல் நடிகை செஜல் சர்மா. இவர் தனது தந்தையின் உடல்நிலை மோசமடைந்து வருவதால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக திடீரென தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது

மும்பையில் உள்ள ஒரு மீரா சாலை என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் செஜல் சர்மா தனது நண்பர்களுடன் சேர்ந்து தங்கியிருந்தார். இந்த நிலையில் திடீரென தனது வீட்டில் செஜல் சர்மாதற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. செஜல் சர்மா தற்கொலை செய்து கொண்டபோது அவரது நண்பர்களும் அதே வீட்டில் தான் இருந்தனர் என்றாலும் அவரது தற்கொலையை இருவருமே கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் செஜல் சர்மாஉடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் செஜல் சர்மா எழுதிய கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாகவும் அதில் தனிப்பட்ட காரணங்களுக்காக தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிட்டிருப்பதாகவும் தெரிவித்தனர் 

செஜல் சர்மா நண்பர்கள் இதுகுறித்து கூறியபோது கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருடைய தந்தைக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்ததாகவும் இதனால் செஜல் சர்மா கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும் தெரிவித்தனர்.

Related posts