பாலாவுக்காக 22 கிலோ வெயிட் போட்டு தொந்தியும், தொப்பையுமான நடிகர்

பாலா படத்திற்காக ஆர்.கே. சுரேஷ் தனது உடல் எடையை அதிகரித்துள்ளார்.

ஜோசப் ரீமேக்

பாலாவின் தாரை தப்பட்டை படம் மூலம் நடிகர் ஆனவர் தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ். 2018ம் ஆண்டு வெளியான ஜோசப் என்கிற மலையாள படத்தை பத்மகுமார் தமிழில் ரீமேக் செய்கிறார். அந்த படத்தை இயக்குநர் பாலா தனது பி ஸ்டுடியோஸ் மூலம் தயாரிக்கிறார். பாலா தயாரிக்கும் படத்தில் ஆர்.கே. சுரேஷ் தான் ஹீரோ. அந்த படத்தில் சுரேஷ் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். பாலா படத்திற்காக சுரேஷ் தனது உடல் எடையை 22 கிலோ அதிகரித்துள்ளார்.

73 கிலோ இருந்த நான் பாலா சார் படத்திற்காக 95 கிலோ ஆகிவிட்டேன் என்று கூறி புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஆர்.கே. சுரேஷ். தவறாமல் ஜிம்மிற்கு சென்று ஒர்க்அவுட் செய்யும் சுரேஷ் இப்படி தொப்பை வைத்து குண்டாக ஆனதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் படத்திற்காக அவர் மெனக்கெடுவதை பார்த்து பலரும் பாராட்டியுள்ளனர். பாலா படத்திற்காக வெயிட் போட்டுள்ள ஆர்.கே. சுரேஷ் பிளாஷ்பேக் காட்சிகளுக்காக ஒல்லியாக வேண்டுமாம்.

பாலா படம் என்றால் நடிகர்கள் குண்டாவதும், ஒல்லியாவதும் வழக்கமாகிவிட்டது. நம்ம விக்ரம் சேது படத்திற்காக ஒல்லிக்குச்சியாக ஆனதை யாராலும் மறக்க முடியாது. பாலா படத்திற்காக கஷ்டப்பட்டால் கெரியர் நன்றாக இருக்கும் என்று நடிகர்கள், நடிகைகள் நம்புகிறார்கள். அதனால் தான் பாலா என்ன சொன்னாலும் சரி, சரி என்று செய்கிறார்கள்.

முன்னதாக விஷ்ணு விஷால் காயம் காரணமாக குண்டாகி அதன் பிறகு ஜிம்மிற்கு சென்று ஒர்க்அவுட் செய்து சிக்ஸ் பேக் வைத்ததை புகைப்படமாக ட்விட்டரில் வெளியிட்டார். மேலும் சிக்ஸ் பேக் வைத்ததை வீடியோ எடுத்தும் வெளியிட்டார். இந்நிலையில் சுரேஷ் உல்டாவாக ஜிம் பாடியில் இருந்து குண்டாக ஆகியுள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts