கோபி பிரையன்ட் உலங்கு வானூர்தி விபத்தில் பலி!

அமெரிக்காவின் கலிபோர்னியாவின் கலாபசாஸ் நகரில் உலங்கு வானூர்தி விபத்தில் அமெரிக்க கூடைப்பந்து உச்ச நட்சத்திர வீரர் கோபி பிரையன்ட்
(Kobe Bryant) உட்பட ஐந்து பைர் உயிரிழந்துள்ளனர். இதில் கோபி பிரையன்டனின் மகளும் இறந்துள்ளார்.

41 வயதான பிரையன்ட் ஒரு தனியார் உலங்கு வானூர்தியில் பயணித்தபோது உலங்கு வானூர்தி  தீப்பிடித்தது விபத்துக்குள்ளாகியது  என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐந்து முறை அமொிக்காவின் தேசிய கூடைப்பந்தாட்ட சம்மேளன சாம்பியன் விளையாட்டின் வரலாற்றில் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்பட்டார்.

பிரபலங்கள் மற்றும் சக விளையாட்டு நட்சத்திர வீரர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர், அவரது திடீர் மரணம் குறித்து பலர் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

Related posts