ஒன்பதாவது மாடியில் இருந்து விழுந்தும் கூலாக எழுந்து நடந்து சென்ற பெண்

அடுக்குமாடி குடியிருப்பின் ஒன்பதாவது மாடியில் இருந்து திடீரென கீழே விழுந்த பெண், எவ்வித காயங்களும் இன்றி உயிர் தப்பியுள்ளார்.

ரஷியாவின் Izluchinsk என்ற பகுதியில் நடந்த ஒரு ஷாக் சம்பவம் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் ஒன்பதாவது மாடியில் இருந்து பெண் ஒருவர் திடீரென ஜன்னல் வழியாக கீழே விழ, எவ்வித காயங்களும் இன்றி அவர் உயிர் தப்பியுள்ளார்.

இந்த சம்பவத்தின் வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது. ஊள்ளூர் ஊடகங்களின் செய்திப்படி, கண்காணிப்பு கேமராவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. கீழே விழுந்ததும் எழுந்து அந்தப் பெண் நடந்து சென்றாலும், அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸை வரவழைத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

எலும்பு முறிவு உள்ளிட்ட எவ்வித காயங்களும் இல்லை என்று அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். லேசான அதிர்ச்சியில் மட்டும் அந்தப் பெண் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், எதற்காக ஜன்னல் வழியாக அவர் கீழே விழுந்தார் என்பது தெரியவில்லை. போலீசார் இதுதொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.

Related posts