உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை சந்திக்கும் சஜித் பிரேமதாச.

ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இடையேயான முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.

குறித்த கூட்டமானது கொழும்பில் உள்ள கண்காட்சி மற்றும் மாநாட்டு நிலையத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக கட்சியின் வட்டாரங்கள் தெரவிக்கின்றன.

இதன்போது கட்சியில் ஏற்பட்டுள்ள தலைமைத்துவ நெருக்கடி நிலைக்கு தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts