7 பிள்ளைகளுக்கு தாயான 60 வயது பெண்ணுடன் 22 வயது இளைஞர் காதல்

22 வயது இளைஞரும் 7 பிள்ளைகளுக்கு தாயான 60 வயது பெண்ணும் தங்களது காதலில் உறுதியாக நிற்பதாகவும் திருமணம் செய்யப்போவதாகவும் கூறியதால் போலீசார் என்ன செய்வது என்று? குழப்பம் அடைந்துள்ளனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் இருக்கும் பிரகாஷ் நகர் பகுதி எட்மாடுடாவுலா காவல் நிலையத்தில் சில நாட்களுக்கு முன்னர் வித்தியாசமான புகார் ஒன்று வந்துள்ளது. 60 பெண்ணின் கணவர் மற்றும் மகன் அந்த புகாரை அளித்திருந்தனர்.

புகாரில் தனது மனைவியை 22 வயது இளைஞர் ஒருவர் காதலிப்பதாகவும் அவளை திருமணம் செய்வேன் என்று கூறுவதாகவும் சொல்லி நடவடிக்கை எடுக்கக் கூறியிருந்தார். இதனை அடுத்து, அந்த பெண் மற்றும் 22 வயது இளைஞர், அவரின் குடும்பத்தினர் என அனைவரையும் போலீசார் விசாரிக்க அழைத்தனர்.

60 வயது பெண் – 22 வயது இளைஞர் காதலுக்கு குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுசேர எதிர்ப்பு தெரிவிக்க, அவர்கள் இருவரும் தங்களது காதலில் உறுதியாக இருந்துள்ளனர். மேலும், திருமணம் செய்துகொள்ளப் போவதாக இருவரும் போலீசாரிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

போலீசார் எவ்வளவோ எடுத்துக் கூறியும், மிரட்டிப் பார்த்தும் அவர்கள் உறுதியாக இருந்ததால், என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பமடைந்த போலீசார், அந்த இளைஞர் மீது அமைதியை குலைக்கும் விதத்தில் செயல்பட்டதாக வழக்குப்பதிவு செய்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Related posts