பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் பிரசன்னா – சினேகா…!

பிரசன்னா – சினேகா தம்பதிக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா கடந்த 2012-ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஹான் என்ற மகன் உள்ளார். திருமணத்துக்குப் பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த சினேகா, கடைசியாக தனுஷ் உடன் பட்டாஸ் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது.

பட்டாஸ் படத்தில் நடித்த போதே நடிகை சினேகா கர்ப்பம் தரித்திருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சினேகா. இந்தப் பதிவைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். நடிகர் பிரசன்னா, தனது ட்விட்டர் பதிவில், தை மகள் வந்தாள் என்று தனது மகளின் வருகையைக் குறிப்பிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

Related posts