கிளிநொச்சியில் கொடூரம்! மனைவியின் கழுத்தையறுத்த கணவன்.

கிளிநொச்சி – கண்டாவளை, மயில்வாகனபுரம் கிராமத்தில் 25 வயதான இளம் மனைவியின் கழுத்தையறுத்து கணவன் கொலை செய்துள்ளதாக தெரியவருகிறது.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கணவன், மனைவியின் கழுத்தையறுத்து கொலை செய்த பின் மனைவியின் உறவினரான யுவதியொருவரையும் வெட்டிய பின்னர் தானும் கழுத்தை வெட்டி கொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

சம்பவத்தில் மனைவியான சுகந்தன் சகுந்தலா (வயது 25) என்பவர் உயிரிழந்துள்ளார்.

Related posts