கமல் தயாரிப்பில் ரஜினியின் கடைசிப் படம்…? 2 இயக்குநர்களில் ஒருவருக்கு ஜாக்பார்ட்!

கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் -கமல்ஹாசன் கூட்டணி அமைப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கும் நிலையில், அவர்கள் இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது சிவா இயக்கத்தில் தனது 168-வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் படம் முடிவடைந்ததும் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக பரபரப்பாக பேசப்படுகிறது. இந்தப் படத்தை இயக்க ராஜமவுலியை அணுகியதாகவும், ஆனால் அவர் ஆர்ஆர்ஆர் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால், இயக்குநர் எச்.வினோத், லோகேஷ் கனகராஜ் ஆகியோரில் ஒருவர் இந்தப் படத்தை இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கமலுக்கு 16 வயதினிலே, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்த ரஜினிகாந்த் பின்னாட்களில் தனது ஸ்டைலான நடிப்பால் சூப்பர் ஸ்டாரானார். இருவரும் இணைந்து நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்து அதன்படி பயணித்து வந்தவர்கள், தற்போது மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாக வெளியாகும் தகவல்கள் சினிமா வட்டாரம் மட்டுமல்லாது ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பான பேசு பொருளாகியுள்ளது.

Related posts