“ரஜினி வெறும் அம்புதான், அவரை யாரோ இயக்குகின்றனர்“ – பிரமேலதா விஜயகாந்த்

பெரியார் யார் என்று தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்த உலகத்திற்கே தெரியும் – பிரமேலதா

பெரியார் குறித்து கருத்து தெரிவித்த விவகாரத்தில் ரஜினி வெறும் அம்புதான் என்றும் அவரை பின்னணியிலிருந்து யாரோ இயக்குகிறார்கள் என்றும் பிரமேலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி தை அமாவாசையையொட்டி திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில் பிரமேலதா சுவாமி தரிசனம் செய்தார்.

இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  “ துக்ளக் விழாவில் பெரியாரை பற்றி பேசியதை நடிகர் ரஜினிகாந்த் தவிர்த்திருக்கலாம்.  பெரியார் யார் என்று தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்த உலகத்திற்கே தெரியும். அவர் சரித்திரமாய் இருந்து சகாப்தம் படைத்தவர். நாம் என்ன செய்யப் போகிறோம் என்று இன்றைய அரசியல் சூழலில் இருப்பதைப் பற்றி பேசவேண்டும். பெரியார் பெண்ணுரிமைக்காக போராடியவர், அவரை பற்றி துக்ளக் விழாவில் பேசியது தவறு. துக்ளக் இதழ் பற்றி ரஜினிகாந்த் பேசி இருந்திருக்கலாம். ரஜினிகாந்த் இதை தவிர்த்திருக்க வேண்டும். ஆனால் அவர் வெறும் அம்பு தான் என்றும் யாரோ அவரை பின்னணியிலிருந்து இயக்குகின்றனர் என்றும் தெரிவித்தார்.

Related posts