இறுவெட்டுக்களை மீள பெற்றுக்கொண்டதாக ரஞ்சன் தெரிவிப்பு

நாடாளுமன்றத்தில் ஒப்படைத்த சில குரல்பதிவுகள் அடங்கிய இறுவெட்டுக்களை மீளப் பெற்றுக்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த தொலைபேசி உரையாடல் பதிவுகள் அடங்கிய இறுவெட்டுக்களை, தனது சட்டத்தரணியின் ஆலோசனையின் பேரில் மீளப் பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 1,500 தொலைபேசி உரையாடல்களைக் கொண்ட ஆறு ஒலிப்பதிவுகள் அடங்கிய இறுவெட்டுக்களை நாடாளுமன்றத்தில் கன்சாட் பிரிவுக்கு ஒப்படைத்ததாகவும் பின்னர், சட்டத்தரணியின் ஆலோசனையின் பேரில், அவற்றை பெற்றுக்கொண்டதாகவும் ரஞ்சன் ராமநாயக்க கூறியுள்ளார்.

மேலும், மீளப் பெற்ற குறித்த இறுவெட்டுக்களை தனியார் இடமொன்றில் பாதுகாப்பாக வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்றத்தில் கையளித்த இறுவெட்டுக்களை ரஞ்சன் ராமநாயக்க மீண்டும் பெற்றுக்கொண்டதாக நாடாளுமன்றில் அதற்குப் பொறுப்பாகவுள்ள உத்தியோகத்தர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts