விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி புதுக்குடியிருப்பில் அகழ்வு நடவடிக்கை.

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் இன்றையதினம் பொலிஸாரால் அகழ்வு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு நகரில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் ஆலயத்துக்கு பின்புறப் பகுதியில், விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய இந்நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இறுதியுத்த நேரத்தில் தமிழீழ விடுதலை புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தை தேடி இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

மிக நீண்ட நேரமாக அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போதிலும், எவ்வித பொருட்களும் மீட்கப்படவில்லை எனத் தெரியவருகிறது.

Related posts