கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படும் மாற்றம்

கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக உள் நுழையும் மற்றும் வெளியேறும் இலங்கை பயணிகளுக்கு மாத்திரம் தனியான விசா கவுண்டர்கள் இரண்டினை திறக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் போது இது தொடர்பில் பணிப்புரை விடுத்திருந்தார்.

அதற்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விமான நிலை மற்றும் விமான சேவை நிறுவனத்தின் உப தலைவர் ரஜீவ் சூரியஆராச்சி தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேலதிக பொலிஸ் பாதுகாப்பு வழங்குதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விமான நிலையத்திற்கு வரும் வீதியிலுள்ள போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வாக எவரிவத்தை சந்தைக்கு அருகில் மாற்று வீதி ஒன்றை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

Related posts