உதடு வறண்டு உதடு வெடிக்கின்றதா?

குளிர் காலங்களில் சருமம் வறண்டு போவது வழக்கம். உடலில் சருமம் வறண்டு போவதற்கு இதற்கு முக்கிய காரணம் உடலில் உள்ள நீரின் அளவு குறைவது தான். இதனால் உடலிலுள்ள உதடு முதலில் வரண்டு காணப்படும்.

உதட்டில் ஏற்படும் வறட்சி காரணமாக உதடு வெடிப்பும் ஏற்படுகிறது. இதனால் உதடு வறண்டு போகாமல் இருக்க இயற்கை முறையில் என்ன செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.

செய்யவேண்டியவை:

அதன் தேங்காய் எண்ணெய்யை ஒரு ஸ்பூன் எடுத்து அதில் ஐந்து சொட்டு அளவுக்கு ஆலிவ் எண்ணெய் ஊற்ற வேண்டும் பின்னர் லேசாக சூடுபடுத்தி காட்டன் துணியில் நனைத்து அதை உதட்டில் தேய்க்க வேண்டும்.

ஒரு மணி நேரத்திற்கு பிறகு காட்டன் துணியால் உதட்டில் இருக்கு எண்ணெய் பசையை துடைத்து கொள்ள வேண்டும் இதை வாரத்திற்கு இருமுறை செய்து வந்தால் உதடுகளில் வெடிப்பிலிருந்து பாதுகாக்கலாம்.

Related posts