70% ஏழைகளின் சொத்துகளை விட 1% பணக்காரர்கள் சொத்து அதிகம்

இந்தியாவில் 70 சதவீத ஏழைகளின் சொத்து மதிப்பை விட, 1 சதவீத பணக்காரர்களின் சொத்து மதிப்பு, 4 மடங்கு அதிகம் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் உள்ள தவோஸ் நகரத்தில் உலக பொருளாதார மன்றத்தின் (WEF) 50வது வருடாந்திர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முன்பாக, ஆக்ஸ்பாம் உரிமைகள் குழு சார்பில் ‘டைம் டு கேர்’ என்ற ஆய்வு வெளியிடப்பட்டது.

ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உலகின் 2,153 கோடீஸ்வரர்கள், 460 கோடி (உலக மக்கள் தொகையின் 60 சதவீதம்) மக்களை விட அதிகமான சொத்துமதிப்பை கொண்டுள்ளனர். இந்தியாவை பொறுத்தவரையில், 63 இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு, 2018-19ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கிய ரூ.24.42 லட்சம் கோடி மதிப்பை விட அதிகம்.

மேலும், ஒரு முன்னணி தொழில்நுட்ப நிறுவனத்தின் சிஇஓ.,வின் ஆண்டு வருமானத்தை, ஒரு பெண் தொழிலாளர் 22,277 ஆண்டுகள் சம்பாதிக்க வேண்டும். அதாவது, பெண் தொழிலாளர் ஒரு ஆண்டில் சம்பாதிப்பதை விட அதிகமாக சிஇஓ 10 நிமிடத்தில் வருமானம் ஈட்டிவிடுகிறார்.

உலகளாவிய சமத்துவமின்மை அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளது மற்றும் கடந்த ஆண்டு தசாப்தத்தில் பில்லியனர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று அறிக்கை கொடியிட்டது. 70 சதவீத இந்திய ஏழைகளின் சொத்து மதிப்பை விட, 1 சதவீத இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 4 மடங்கு அதிகமாக உள்ளது.

உலக அளவில் 22 கோடீஸ்வரர்களின் மதிப்பு என்பது, ஆப்ரிக்காவில் உள்ள அனைத்து பெண்களின் மதிப்பை விட அதிகமாகும். அடுத்த 10 ஆண்டுகளில் கோடீஸ்வரர்கள் தற்போது செலுத்தும் வரியை விட 0.5 சதவீத வரி கூடுதலாக செலுத்துவார்கள்.

இதன் மதிப்பு என்பது, முதியோர் பராமரிப்பு, குழந்தை பராமரிப்பு, கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் 11.7 கோடி பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க தேவையான முதலீட்டிற்கு சமமாக இருக்கும். இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts