சுலைமானியின் திக் திக் இறுதி நிமிடங்கள்: டிரம்ப் விளக்கம்

ஈரான் ராணுவ தளபதி சுலைமானியை தாக்குதல் நடத்தி கொன்றது குறித்த விபரங்களை, அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கி உள்ளார்.

மேற்கு ஆசிய நாடான ஈராக் சென்றபோது, ஈரான் ராணுவத்தின் முக்கிய தளபதியான குவாசிம் சுலைமானியை, ஆளில்லா விமானம் மூலம் நடத்திய தாக்குதலில், அமெரிக்கா சமீபத்தில் கொன்றது. இந்த தாக்குதல் எப்படி நடத்தப்பட்டது என்பது குறித்து, இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், புளோரிடாவில் நடந்த கட்சி கூட்டத்தில் பேசிய டிரம்ப், தாக்குதல் நடத்தப்பட்ட விபரங்களை கூறியுள்ளார். ஊடகங்களுக்கு, இது தொடர்பான, ‘ஆடியோ’ கிடைத்துள்ளது.

அதில் டிரம்ப் கூறியிருப்பதாவது: சுலைமானியை இலக்காக வைத்து, ஆளில்லா விமானம் செலுத்தப்பட்டது. அப்போது நமது வீரர்கள், எனக்கு ஒவ்வொரு நொடியும், வர்ணனை அளித்தனர். ‘இன்னும் ஒரு நிமிடம்தான் பாக்கி. 10, 9, 8…’ என, கவுன்ட் – டவுன் கொடுத்தனர். அப்போது திடீரென, ‘பூம்’ என, சத்தம் கேட்டது. அவ்வளவு தான், சுலைமானி கொல்லப்பட்டார். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.

Related posts