கங்குலி, சச்சினை ஓரங்கட்டிய டான் ரோஹித்!

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் ரோஹித் ஷர்மா 9000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

மும்பையில் நடந்த முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வென்றது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வென்றது.

இரு அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி பெங்களுருவில் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் இந்திய துவக்க வீரர் ரோஹித் ஷர்மா 4 ஓட்டங்கள் எடுத்த போது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 9000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.

இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 9000 ஓட்டங்களை எட்டிய வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்தார்.

ரோஹித் ஷர்மா தனது 217ஆவது இன்னிங்சில் இம்மைல்கல்லை எட்டியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 9000 ஓட்டங்களை எட்டிய வீரர்கள் பட்டியலில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி (194 இன்னிங்ஸ்) முதலிடத்தில் உள்ளார்.

முன்னாள் தென் ஆப்ரிக்க வீரர் டிவிலியர்ஸ் (208) இரண்டாவது இடத்தில் உள்ளார். முன்னாள் இந்திய வீரர்களான சவுரவ் கங்குலி (228), சச்சின் (235), மேற்கிந்திய தீவுகள் அணியின் லாரா (239) ஆகியோர் இப்பட்டியலில் முறையே 4, 5, 6ஆவது இடங்களில் உள்ளனர்.

Related posts