ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்ட விழாவில் எதிர்பாராத விதமாக விபத்து ; 3 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்!

எத்தியோப்பியால் இடம்பெற்ற கிறிஸ்தவ மத நிகழ்வொன்றின்போது மரக் குற்றிகளால் வடிவமைக்கப்பட்டு நிறுத்தப்பட்டிருந்த கட்டமைப்பொன்று எதிர்பாரத விதமாக இன்று இடிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இந்த அனர்த்தம் காரணமாக 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எத்தியோப்பிய கோண்டரில் நகரில் இடம்பெற்ற திம்காட் என்ற குறித்த கிறிஸ்தவ திருவிழாவில் ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந் நிகழ்வில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கலந்து கொண்டதாக எத்தியோப்பியன் செய்தி நிறுவனம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த ஆண்டின் பிற்பகுதியில் யுனெஸ்கோ, எத்தியோப்பியாவின் திம்காட் என அழைக்கப்படும் இந்த விழாக்களை அதன் மனிதநேயத்தின் அருவமான கலாசார பாரம்பரிய பட்டியலில் சேர்த்தது. இதனால் இந்த விழாவானது அதிக பங்கேற்பாளர்களை ஈர்த்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts