கொரோனவைரஸ் தொற்றினால் நான்காவது மரணம் பதிவாகியுள்ளது

இலங்கைக்குள் கொரோனவைரஸ் தொற்றினால் ஏற்பட்ட நான்காவது மரணம் இன்று இரவு பதிவாகியுள்ளது அங்கொடை தொற்று நோய் எதிர்ப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 58வயதான ஆண் ஒருவரே சிசிச்சை பலனின்றி மரணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்தநிலையில் கொரோனவைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று இரவு வரை 151 ஆக உயர்ந்துள்ளது.

மேலும்

பொதுத்தேர்தல் குறித்து உயர்நீதிமன்றத்தின் கருத்தை அறியுமாறு கோரிக்கை

பொதுத்தேர்தல் நடத்தப்படும் திகதி குறித்து உயர்நீதிமன்றத்தின் கருத்தை அறியுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதியின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அரசியலமைப்பின்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பில் கருத்தைக்கோரமுடியும் என்ற அடிப்படையிலேயே இந்த கோரிக்கையை தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ளது ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறவிருந்த தேர்தல் கொரோனவைரஸ் பரவல் காரணமாக தற்போதைய நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது இந்தநிலையில்…

மேலும்

தற்கொலை குண்டுதாரிகளுக்கு உதவிபுரிந்த இருவர் கைது..!!

உயிரித்த ஞாயிறு குண்டுத்தாகு்குதல் தொடர்பில் இருவர் கொதட்டுவ மற்றும் மட்டக்குளி பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இன்றைய தினம் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து காவல் துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார். இதற்கமைய சினமன் கிரேண்ட் நட்சத்திர உணவகத்தின் மீது தற்கொலை…

மேலும்

இலங்கைக்குள் கொரோனவைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 150..

இலங்கைக்குள் கொரோனவைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 150ஆக உயர்ந்துள்ளது. இன்று மாலை 5மணிக்கு இந்த தகவல் வெளியானது. இதேவேளை கோரோனோவினால் இதுவரை 3பேர் மரணமாகியுள்ளனர். 21 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்

மேலும்

பொய்யான தகவலை பரப்பிய பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது

கொரோனவைரஸ் தொடர்பில் பொய்யான தகவலை face book ஊடாக பரப்பிய பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டு ஏப்ரல் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இந்த தகவலை காவல்துறை பேச்சாளர் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே இவ்வாறான தகவல்கள் தொடர்பில் காவல்துறையினர் எச்சரிக்கைகளை விடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது

மேலும்

இனாமுல் அரூஸ் மாவத்தையின் ஒழுங்கை இன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு மருதானையில் கொரோனவைரஸ் தொற்றாளர் மரணமானதை அடுத்து இனாமுல் அரூஸ் மாவத்தையின் ஒழுங்கை இன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதியில் 220குடும்பங்களை சேர்ந்த 1400 வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தொடர்மாடிகளில் மற்றும் வீதியோரங்களில் வசிப்போர் வீடுகளில் இருந்து வெளியேறவேண்டாம் என்றும் வீட்டுக்கு வீடு செல்வதை தவிரக்குமாறும் கொழும்பு மாநகரசபையின் மருத்துவ அதிகாரி ருவன் விஜயமுனி கோரியுள்ளார்

மேலும்